பொதுமக்கள் சாலை மறியல்
கோவிலுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதை கண்டித்து குத்தாலம் அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை கண்டித்து குத்தாலம் கிழக்கு ஒன்றிய பா.ஜனதா தலைவர் வினோத், மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் மோடி கண்ணன், அ.தி.மு.க. முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் முத்துக்குமார் மற்றும் பொதுமக்கள் குத்தாலம் அய்யனார்புரம் அருகே நேற்று முன்தினம் இரவு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த குத்தாலம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அபிராமி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது அவரது காரினை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்களது கோரிக்கையை அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.