பொதுமக்கள் சாலை மறியல்


பொதுமக்கள் சாலை மறியல்
x

பாப்பாக்குடி அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

முக்கூடல்:

பாப்பாக்குடி அருகில் உள்ள அனைந்தநாடார்பட்டியில் விதிகளை மீறி கல்குவாரிகள் செயல்படுவதாகவும் பாறைகளை உடைப்பதற்காக வெடிகள் வைத்து தகர்ப்பதால் அருகில் உள்ள வீடுகள் குலுங்குகின்றன. எனவே கல்குவாரியை மூடக்கோரி அனைந்தநாடார்பட்டி, கலிதீர்த்தான்பட்டி, பனையன்குறிச்சி, நாலாங்கட்டளை மற்றும் ஆழ்வான் துலு க்கப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பாப்பாக்குடி அருகே ஆலங்குளம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அம்பாசமுத்திரம் தாசில்தார் ஆனந்த பிரகாஷ் மற்றும் பாப்பாக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சந்திரமோகன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story