போதைக்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து


போதைக்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து
x

வேலூரில் போதைக்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.

வேலூர்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வேலூர், திருப்பத்தூர் மாவட்டக்குழு சார்பில் போதைக்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி ஓட்டேரி பஸ் நிறுத்தம் அருகே நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத்தலைவர் சூர்யா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சங்கர், தினேஷ், சார்லஸ் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் நவீன் வரவேற்றார். மாவட்ட தலைவர் திலீபன் பொதுமக்களிடம் இருந்து கையெழுத்து பெறும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அதைத்தொடர்ந்து ஓட்டேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் போதைக்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டன. வேலூர், திருப்பத்தூர் உள்பட தமிழகம் முழுவதும் போதைக்கு எதிராக பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கையெழுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விரைவில் வழங்கப்பட உள்ளது என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனன்.


Next Story