பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் பொதுமக்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்


பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில்   பொதுமக்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்
x

பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் பொதுமக்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்,

பூதப்பாண்டியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான பூதலிங்கசாமி, சிவகாமி அம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்து 22 ஆண்டுகள் ஆகிறது.

இதையடுத்து கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கோவிலில் கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக சாமி சிலைகளை வெளியே கொண்டு வந்து பலவகை மூலிகை மூலம் மருந்து சாத்தும் பாலாலயம் என்ற சிறப்பு பூஜை செய்ய வேண்டும். ஆனால், கோவிலின் ஸ்ரீகரியம் பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடம் தகவல் எதுவும் தெரிவிக்காமல் நேற்று இரவு பாலாலய பூஜைக்காக பணியாளர்களை அழைத்ததாக தெரிகிறது. இதையறிந்த ஊர் பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் நேற்று இரவு 7 மணிக்கு கோவில் முன் திரண்டனர். பின்னர், அவர்கள் ஸ்ரீகாரியத்தின் செயலை கண்டித்து கோவிலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட கோவில்களின் இணை ஆணையர், ஸ்ரீகாரியம் ஆகியோர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லையென்றால் சாலை மறியலில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.

இந்தநிலையில் எம்.எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆர்.காந்தி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போனில் பேசினர். அப்போது, காலையில் நேரில் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறினர். இதையடுத்து அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு இரவு 10 மணிக்கு கலைந்து சென்றனர்.

------


Next Story