முறையாக 100 நாள் வேலை வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல்


முறையாக 100 நாள் வேலை வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல்
x

முறையாக 100 நாள் வேலை வழங்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

மங்களமேடு:

100 நாள் வேலை

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள வடக்கலூர் கிராமத்தில் நேற்று தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு (100 நாள் வேலை) திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்றது. இந்த பணிக்காக நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் வந்தனர்.

அப்போது சிலரின் பெயர்கள், 100 நாள் வேலைக்கான பட்டியலில் இல்லை என்று தெரிகிறது. இதனால் அவர்கள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பெயர்கள், அந்த பட்டியலில் இல்லை என்றும், வசதி வாய்ப்பு உள்ளவர்களின் பெயர்கள் அந்த பட்டியலில் உள்ளது என்றும் புகார் தெரிவித்தனர்.

மறியல்

இதையடுத்து, தகுதியானவர்களுக்கு 100 நாள் வேலையை முறையாக வழங்கக்கோரி, ெபாதுமக்கள் சிலர் அப்பகுதியில் உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த வடக்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன் அங்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானமடைந்த பொதுமக்கள், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story