குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்


குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 15 Sept 2023 1:30 AM IST (Updated: 15 Sept 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

உப்புக்கோட்டையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

உப்புக்கோட்டை ஊராட்சி 4-வார்டு பகுதியில் சுமார் 80 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு முல்லைப்பெரியாற்றில் உள்ள உறைகிணறுகளில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் சுமார் 3 மாதங்களுக்கு முன்பு இங்கு சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டன. ஆனால் தற்போது வரை குழாய்கள் சரி செய்யப்படவில்லை.இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமம் அடைந்து வந்தனர்.

இந்நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் தேனி -குச்சனூர் சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே கயிறு கட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி தலைவர் மூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்தார். பின்னர் அவர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குடிநீர் வினியோகம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story