பொதுமக்கள் 'திடீர்' போராட்டம்


பொதுமக்கள் திடீர் போராட்டம்
x

நெல்லை டவுனில் பொதுமக்கள் திடீரென போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை டவுன் சாலியர் தெரு பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story