தாமதமாக மனுக்களை பெற்றதால் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தவிப்பு


தாமதமாக மனுக்களை பெற்றதால் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தவிப்பு
x

விருதுநகரில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியில் தாமதமாக மனுக்களை பெற்றதால் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தவித்தனர்.

விருதுநகர்


விருதுநகரில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியில் தாமதமாக மனுக்களை பெற்றதால் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தவித்தனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலெக்டர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று அவர்களது குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் பொதுமக்கள் கலெக்டரிடமே நேரடியாக மனுக்களை கொடுக்க வாய்ப்புள்ளது என்பதால் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு அதிக அளவில் மக்கள் வருவர். அதிலும் குறிப்பாக கிராமப்பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருவது வழக்கமாக உள்ளது.

மக்கள் தவிப்பு

இந்தநிலையில் நேற்று கலெக்டர் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்று விட்டதால் குறை தீர்க்கும்நாள் நிகழ்ச்சி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

கலெக்டர் வருவதற்கு முன்பாக பிற அதிகாரிகளும் மனுக்களை பெறாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிக எண்ணிக்கையில் நேற்று கூடியிருந்த பொதுமக்கள் மிகுந்த தவிப்புக்கு உள்ளாகினர். அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளும் காலையிலேயே வந்துவிட்டதால் அவர்களும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையில் பெரும் தவிப்புக்கு உள்ளாகினர்.

தாமதம்

இதற்கிடையே கலெக்டர் மதியம் 12 மணிக்கு மேல் அலுவலகம் வந்தார். அதன் பின்னர் மனுக்களை பெறும் நிகழ்ச்சி தொடங்கியது. இதனால் கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் கூறுகையில், பொதுமக்கள் கலெக்டரிடம் நேரடியாக மனுக்களை கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் தான் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சிக்கு வருகிறார்கள். அவ்வாறு இருக்கையில் கலெக்டர் இல்லாத போது பொதுமக்கள் மிகுந்த தவிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. கலெக்டர் இல்லாத நிலையில் அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகளாவது மனுக்களை பெறலாம். அவர்களும் மனுக்களை பெறாத நிலையில் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படும் நிலை ஏற்பட்டுகிறது. எனவே இதனை முறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story