பாதியில் திரும்பும் பஸ்களால் பொதுமக்கள் அவதி
பாதியில் திரும்பும் பஸ்களால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் இருந்து அரசு டவுன் பஸ் தடம் எண் 19 பொன்னப்பந்தாங்கல் வழியாகவும், தடம் எண் 20 ஒழுகூர் வழியாகவும் பாணாவரம் வரை இயக்கப்படுகிறது. இதில் குறிப்பாக மாலை 6 மணியளவில் ஆற்காட்டில் இருந்து இயக்கப்படும் இரண்டு பஸ்களும் பாணாவரம் வரை இயக்கப்படாமல், தடம் எண் 19 பொன்னப்பந்தாங்கல் வரையும், தடம் எண் 20 ஒழுகூர் வரை மட்டுமே சென்று திரும்பி விடுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு சென்று வீடு திரும்பும் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பஸ்களை பாணாவரம் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story