இறந்த கோவில் காளைக்கு பொதுமக்கள் அஞ்சலி


இறந்த கோவில் காளைக்கு பொதுமக்கள் அஞ்சலி
x

இறந்த கோவில் காளைக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்

மதுரை

மேலூர்

மேலூர் அருகே அய்யனார்புரம், கழுங்குப்பட்டி, எழுவக்கரையான்பட்டி, மாணிக்கம்பட்டி உள்ளிட்ட நான்கு கிராம மக்கள் வழிபடும் முனியாண்டி சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளை ஒன்று உடல் நலக்குறைவினால் இறந்தது. இதையடுத்து மேற்கண்ட 4 கிராம மக்கள் ஒன்று கூடி மாலைகள், புதிய வேட்டி, துண்டுகள் அணிவித்து இறந்து காளைக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் டிராக்டரில் காளையின் உடலை வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று அடக்கம் செய்தனர். இந்த காளை, அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், உள்ளிட்ட பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story