வந்தே பாரத் ெரயிலுக்கு பொதுமக்கள் மலர் தூவி வரவேற்பு
திருப்பத்தூர் ெரயில் நிலையத்தில் வந்தே பாரத் ெரயிலுக்கு பொதுமக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.
சென்னையில் இருந்து கோவைக்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தனர். இந்த ெரயில் நேற்று ஒரு நாள் மட்டும் திருப்பத்தூர் ஜங்ஷனில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி மாலை 6 மணி முதல் வந்தே பாரத் ெரயிலை பார்வையிட, பாரதிய ஜனதா கட்சியினர், ெரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள், திருப்பத்தூர் ெரயில்வே ஜங்ஷன் பயணிகள் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் ெரயில் நிலையத்தில் குவிய தொடங்கினர்.
வந்தே பாரத் ரெயில் திருப்பத்தூர் ெரயில் நிலையத்துக்கு இரவு 7.13 மணிக்கு வந்தடைந்தது. அப்போது கூடியிருந்த பொதுமக்கள் மலர்களை தூவி வரவேற்றனர். இனிப்புகள் வழங்கப்பட்டது. பா.ஜ.க. கோட்ட பொறுப்பாளர் வெங்கடேசன், மாவட்ட தலைவர் வாசுதேவன், நகரத் தலைவர் சண்முகம், பொதுச் செயலாளர்கள் கவியரசு, ஈஸ்வர், புதூர் நாடு டி.ராமசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.