பொது நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


பொது நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அரசியல் கட்சியினர், பொது நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடலூர்

கடலூர்:-

கடலூர் மாநகர புதிய பஸ் நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றும் மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். தற்போது உள்ள பஸ் நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும். திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாநகர அரசியல் கட்சிகள், குடியிருப்போர் சங்கம், பொதுநல அமைப்புகளின் சார்பில் நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், மாவட்ட நிர்வாகி ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயற்குழு உறுப்பினர் சுப்புராயன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் வக்கீல் திருமார்பன், சக்திவேல், மக்கள் நீதி மையம் மாவட்ட செயலாளர் மூர்த்தி, ம.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் நாகராஜ், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் ரஹிம், இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர் நஸ்சுருதீன், திராவிட கழக தலைவர் மாதவன், குடியிருப்போர் சங்க உதவி பொதுச்செயலாளர் தேவநாதன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் பாலு, கடலூர் மாநகர பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகி பக்கீராம் நன்றி கூறினார்.


Next Story