மக்கள் நல பணியாளர்கள் பணியில் சேரலாம் கலெக்டர் தகவல்
கலெக்டர் தகவல்
ஈரோடு
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களிடம் விருப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. அவர்கள் அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், "வேலை உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளர்" பணியிலும், கிராம ஊராட்சி தொடர்பான பணியிலும் கூடுதலாக ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கடந்த 1-ந் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தில் பணியில் சேராத தகுதியுள்ள முன்னாள் மக்கள் நல பணியாளர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் முன்பே கொடுக்கப்பட்ட விருப்ப விண்ணப்பங்களின் அடிப்படையில் பணியில் சேர்ந்து கொள்ளலாம்.
இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story