மேட்டூர் அணையில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு என்ஜினீயர் ஆய்வு
மேட்டூர் அணையில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு என்ஜினீயர் ஆய்வு செய்தார்.
சேலம்
மேட்டூர்:
தமிழக பொதுப்பணி துறையின் சேலம் வட்ட கண்காணிப்பு என்ஜினீயர்அன்பழகன் நேற்று மேட்டூர் அணைக்கு வந்தார். அவர், மேட்டூர் அணையின் வலது கரை, இடது கரை, கவர்னர் பாயிண்ட், 16 கண் பாலம் உள்பட முக்கிய பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அணைக்கு நீர்வரத்து, நீர் வெளியேற்றும் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக மேட்டர் வந்த கண்காணிப்பு என்ஜினீயரை பொதுப்பணித்துறையின் மேட்டூர் நிர்வாக என்ஜினீயர் சிவக்குமார், உதவி நிர்வாக என்ஜினீயர் செல்வராஜ், அணைபிரிவு உதவி என்ஜினீயர் மதுசூதன் ஆகியோர் வரவேற்று அணையை சுற்றி காண்பித்தனர்.
Related Tags :
Next Story