ஆணையத்தின் அறிக்கையை வெளியிட்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்


ஆணையத்தின் அறிக்கையை வெளியிட்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்
x

ஆணையத்தின் அறிக்கையை வெளியிட்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணைய உறுப்பினர் கூறினார்.

புதுக்கோட்டை

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். அதன் பின்னா் அவா் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவிலேயே முதல் முறையாக புதுக்கோட்டையில் ஜூன் மாதம் இரண்டாவது வாரம் ஆணையத்தின் சார்பில் சிறப்பு அமர்வு நடைபெற உள்ளது. அன்றைய தினம் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் தங்களுக்கு உள்ள குறைகள், பிரச்சினை குறித்து புகார்கள் ஆகியவற்றை சிறப்பு அமர்வில் தெரிவிக்கலாம். அன்றைய தினமே விசாரிக்கப்பட்டு அதற்குண்டான தீர்வு மேற்கொள்ளப்படும். இந்தியாவிலேயே புதுக்கோட்டையில் தான் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தைகள் திருமண விவகாரத்தில் ஆணையத்தின் 132 பக்க அறிக்கையை வெளியிட்டால் தமிழகத்தில் மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடந்தது உண்மை. சிறுமிகள் கொடுத்த ஆடியோ, வீடியோ வாக்குமூலங்கள் ஆணையத்தில் உள்ளது. நாளை ஆளுநரையும், அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் ஆணையத்தின் 132 பக்க அறிக்கை சமர்ப்பிக்கப்படும். தமிழகத்தில் மூன்று மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது, இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடவடிக்கை எடுக்காமல் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து வருகிறார். சிதம்பரத்தில் உள்ள கோவில் சொத்துக்களை அரசின் வசம் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு தீட்சிதர்கள் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும், நடக்காத குழந்தைகள் திருமணத்தை நடந்தது போலவும் சித்தரித்து பல்வேறு அவதூறுகளை பரப்பி வருகின்றனர். இது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story