மிளகு தோட்டத்தை பார்வையிட்ட புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர்


மிளகு தோட்டத்தை பார்வையிட்ட புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர்
x

மிளகு தோட்டத்தை புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் பார்வையிட்டார்.

புதுக்கோட்டை

வடகாடு பகுதியை சேர்ந்தவர்கள் பால்சாமி, பாக்கியராஜ், செந்தமிழ்செல்வன். இவர்கள் சமவெளி பகுதிகளிலும் மிளகு சாகுபடி செய்ய முடியும் என நிரூபித்து காட்டியுள்ளனர். இதனை அறிந்த புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று மிளகு தோட்டத்தை பார்வையிட்டார். பின்னர் அங்கு நன்கு வளர்ந்து இருந்த கொடி வகையான மிளகு செடிகளையும், அதில் கொத்து கொத்தாக காய்த்து தொங்கிய மிளகுகளையும் பார்வையிட்டதோடு அதனை எவ்வாறு பயிரிட்டு வருகின்றனர் என்பது குறித்தும் விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

இதுகுறித்து வேளாண் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், புதுச்சேரியில் விவசாயிகளுக்கு பல்வேறு வகையான மானிய உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், புதுச்சேரியில் கரும்பு, நெல், வாழை விவசாயத்தை தான் பெரும்பாலான விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு ஒரு மாற்று பயிராகவும், பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் மிளகு சாகுபடி பணிகளில் விவசாயிகளை ஈடுபட செய்யும் நோக்கிலும் தான் இங்கு வந்திருக்கிறேன்.

இங்கிருந்து ஏற்கனவே மிளகு செடிகளை வாங்கி சாகுபடி செய்து இருப்பதாகவும், அது அதிக அளவு பலன் தந்து கொண்டிருப்பதாகவும், ஏனைய விவசாயிகளும் பயன்பெறும் வகையில், தன்னோடு முன்னோடி விவசாயிகள் சிலரை கூட்டி வந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் பிப்ரவரி மாதம் 10, 11, 12 ஆகிய தேதிகளில் புதுச்சேரியில் மண் மற்றும் விவசாய வேளாண் கண்காட்சி நடைபெற இருப்பதாகவும், அங்கு வரும் விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது குறித்து விளக்கம் அளிக்க இருக்கிறது. இங்கிருந்து மிளகு செடிகளை வாங்கி புதுச்சேரியில் மிளகு சாகுபடி செய்ய முன்வரும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க இருப்பதாக கூறினார்.


Next Story