புதுச்சேரி: கடற்கரையில் கரை ஒதுங்கிய பச்சிளம் குழந்தையின் சடலம் - போலீசார் விசாரணை


புதுச்சேரி: கடற்கரையில் கரை ஒதுங்கிய பச்சிளம் குழந்தையின் சடலம் - போலீசார் விசாரணை
x

வீராம்பட்டினம் கடற்கரையில் பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் கரைஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீராம்பட்டினம்,

புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் மீனவ கிராம கடற்கரையில் பச்சிளம் குழந்தையின் சடலம், கரை ஒதுங்கியுள்ளது. சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கடற்கரையில் இருந்த பச்சிளம் பெண் குழந்தையின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தை மருத்துவமனையில் பிறந்ததற்கான அறிகுறி இருந்ததால், குழந்தையை கடலில் வீசிச் சென்றவர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் கரைஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story