புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி சாமி தரிசனம்


புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி சாமி தரிசனம்
x

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி சாமி தரிசனம் செய்தார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் உள்ள புவனேஸ்வரி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலுக்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி அடிக்கடி வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். அதேபோல் இன்று இரவு புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி புவனேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்தி சாமி தரிசனம் செய்தார். வாழை இலையில் அரிசியை நிரப்பி அதில் 31 அகல் விளக்குகளை ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினார். அதன் பின்னர் புவனேஸ்வரி அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அவர் கோவிலை பார்வையிட்டார்.


Next Story