புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி பொம்மை போல் செயல்பட்டு வருகிறார்


புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி பொம்மை போல் செயல்பட்டு வருகிறார்
x

அதிகாரிகள் யாரும் பேச்சை கேட்காததால் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி பொம்மை போல் செயல்பட்டு வருகிறார் என்று நாராயணசாமி கூறினார்.

நாகப்பட்டினம்

நாகூர்:

அதிகாரிகள் யாரும் பேச்சை கேட்காததால் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி பொம்மை போல் செயல்பட்டு வருகிறார் என்று நாராயணசாமி கூறினார்.

பேட்டி

நாகை மாவட்டம் நாகூரில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்ள வந்த புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதியை பெற்றுத்தருவதை விட்டு, தமிழக அரசை குறை கூறிவருகிறார்.

பொம்மை போல் செயல்படுகிறார்

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி பேச்சை அதிகாரிகள் உள்பட யாரும் கேட்பதில்லை. முதல்-அமைச்சர் ரெங்கசாமி பொம்மை போல் செயல்பட்டு வருகிறார். முதல்-அமைச்சராக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செயல்பட்டு வருகிறார். இதனால் புதுச்சேரியின் வளர்ச்சி திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

மக்களவையில் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க முடியாது என மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது. எனவே பா.ஜ.க. கூட்டணியை விட்டு விலகி என்.ஆர்.காங்கிரஸ் போராட்டம் நடத்தினால், காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story