புதுக்குடி பூரண புஷ்கலாம்பிகா கோவில் கும்பாபிஷேகம்


புதுக்குடி பூரண புஷ்கலாம்பிகா கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 9 Jun 2022 11:23 PM IST (Updated: 9 Jun 2022 11:26 PM IST)
t-max-icont-min-icon

புதுக்குடி பூரண புஷ்கலாம்பிகா கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கிராமத்தில் ஸ்ரீ பூரண புஷ்கலாம்பிகா, பால விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், அய்யனார் உள்ளிட்ட சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நேற்று காலை 10.30 மணி அளவில் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 6-ந் தேதி முதல் அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, கணபதி பூஜை, தன பூஜை, அங்குரார்ப்பணம், சொர்ண பூஜை, பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றன. இதில் புதுக்குடி, மேலூர், தேவனூர், குளத்தூர், இலையூர், வாரியங்காவல், செங்குந்தபுரம், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து பொதுமக்கள் திரண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ஏழு மண்டகப்படி வகையறாக்கள், விழா குழுவினர், கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story