புதுக்கோட்டை: அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
புதுக்கோட்டை நகர்புற ஊரமைப்பு உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை,
அரியலூரை சேர்ந்தவர் தன்ராஜ். இவர் புதுக்கோட்டையில் நகர்புற ஊரமைப்பு உதவி இயக்குனராக பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில் இன்று காலை அரியலூரில் உள்ள தன்ராஜின் வீடு , கல்யாண மண்டபம், ஓடக்கார தெருவில் உள்ள இல்லம், பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கூத்தூரில் உள்ள வீடுகளில் மொத்தம் 6 இடங்களில் 6 குழுக்களாக 40 லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தி வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story