புதுக்கோட்டை தெற்கு- அமைச்சர் ரகுபதி, வடக்கு- கே.கே.செல்லப்பாண்டியன்
தி.மு.க. மாவட்ட செயலாளர்களாக புதுக்கோட்டை தெற்கு-அமைச்சர் ரகுபதி, வடக்கு-கே.கே. செல்லப்பாண்டியன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட செயலாளர்கள் தேர்வு
தி.மு.க.வின் 15-வது உட்கட்சி பொதுத்தேர்தலின் படி புதுக்கோட்டை கட்சிக்கு பேரூர், ஒன்றிய, நகர, மாவட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று முன்தினம் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்திற்கு செயலாளராக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியும், வடக்கு மாவட்டத்திற்கு செயலாளராக கே.கே.செல்லப்பாண்டியனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மாவட்ட நிர்வாகிகள்
இதேபோல் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அவைத்தலைவர் அரு.வீரமணி, துணை செயலாளராக (பொது) கருப்பையா, துணை செயலாளராக (ஆதிதிராவிடர்) மதியழகன், துணை செயலாளர் (மகளிர்) ராஜேஸ்வரி, பொருளாளர் லியாகத் அலி.
தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சுப.சரவணன், கீரை.தமிழ்ராஜா, சண்முகம்.
பொதுக்குழு உறுப்பினர்கள் பழனியப்பன், சாத்தையா, செந்தில்குமார், வழக்கறிஞர் செல்லத்துரை, எட்வர்ட் சந்தோசநாதன், சி.ஆர்.வி.சித்ரா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தெற்கு மாவட்ட நிர்வாகிகள்
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சுப்பிரமணியன், துணைச் செயலாளர் (பொது) ஞான.இளங்கோவன், துணைச் செயலாளர் (ஆதிதிராவிடர்) அடைக்கலம், துணைச் செயலாளர் (மகளிர்) ஸ்ரீதேவி, பொருளாளர் அபுதாஹீர். தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், கலைமணி, ஜெயராமன், ஆனந்த். பொதுக்குழு உறுப்பினர்கள் மணிராஜன், சீனி.பழனியப்பன், வீரையா, செல்வம், சுப்பிரமணியன், கலைவாணி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கட்சியினரும், தோழமை கட்சியினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.