புதுக்கோட்டையில்முத்துமாலை அம்மன் கோவிலில் நோன்பு பூஜை
புதுக்கோட்டையில் முத்துமாலை அம்மன் கோவிலில் நோன்பு பூஜை நடந்தது.
தூத்துக்குடி
சாயர்புரம்:
புதுக்கோட்டை இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன், முத்துமாலை அம்மன் கோவிலில் பங்குனி மாத பிறப்பு மற்றும் காரடையான் நோன்பு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு சங்கல்பம் கணபதி பூஜையுடன் தீபாராதனை நடைபெற்றது. அம்மனுக்கு மஞ்சள், பால், தயிர், தேன், விபூதி, சந்தனம், பன்னீர் போன்ற 20 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, செவ்வரளி, எலுமிச்சை மாலைகள் சாற்றி சிறப்பு அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story