புதுக்கோட்டையில்வாகனம் மோதி பாதயாத்திரை பக்தர் சாவு


புதுக்கோட்டையில் வாகனம் மோதி பாதயாத்திரை பக்தர் பரிதாபமாக இறந்து போனார்.

தூத்துக்குடி

சிவகாசி திருத்தங்கலில் இருந்து 100 பேர் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்கள் புதுக்கோட்டை பழைய பாலத்தில் நடந்து சென்ற போது, அந்த வழியாக வந்த வாகனம் சில பக்தர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் திருத்தங்கல் பாண்டியநகரை சேர்ந்த வீரபாண்டி (வயது 31) என்பவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு பக்தரான சங்கரபாண்டியன் (47) என்பவர் காயம் அடைந்தார். அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story