புதுநகர் கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


புதுநகர் கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

புதுநகர் கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மச்சுவாடி புதுநகர் பகுதியில் கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக கோவிலில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை, கணபதி ஹோமம் செய்யப்பட்டு பின்னர் புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கலசங்களில் நிரப்பப்பட்டது. பின்னர் அதனை யாகசாலை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. புனிதநீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதையடுத்து சிவாச்சாரியார்கள் கருமாரியம்மன் கோவில் மூலஸ்தான விமான கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் திருப்பணி குழு தலைவர் புது நகர் குமார், நகர் மன்ற தலைவர் திலகவதி, நகர தி.மு.க. செயலாளர் செந்தில், கவுன்சிலர்கள் கார்த்திகை செல்வி, பர்வேஸ் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது.


Next Story