புதுப்பேட்டை அரசு பள்ளியில் விழிப்புணர்வு முகாம்
புதுப்பேட்டை அரசு பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், வாணியம்பாடி துணைபோலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் அறிவுறுத்தலின்படி நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் தடுப்பு, சைபர் கிரைம் மற்றும் குழந்தைகள் திருமண தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளியின் தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
இன்ஸ்பெக்டர் சாந்தி பேசுகையில் மாணவர்கள் பள்ளி பருவத்தில் கல்வியில் கவனம் செலுத்தி உயர்கல்வி பயின்று நல்ல நிலைக்கு செல்ல தங்கள் அறிவை பயன்படுத்த வேண்டும். இளம் வயதில் மது பழக்கம், புகைபிடித்தல் உள்ளிட்ட போதைப் பொருளுக்கு அடிமையாவதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். வளர் இளம் பெண்கள் இளம் வயதில் இனக்கவர்ச்சி மூலம் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதனால் சிறுவயதிலேயே திருமணம் ஆகி தங்களின் பிரகாசமான வாழ்க்கையை இழந்து விடுகின்றனர். இதனால் பள்ளி மாணவிகள் சிறு வயது திருமணத்தை தவிர்க்க வேண்டும். செல்போன் பயன்படுத்துபவர்கள் தேவையானவற்றுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றார்.