கலெக்டர் முகாம் அலுவலகத்தில் புகுந்த புள்ளிமான்
ராணிப்பேட்டை கலெக்டர் முகாம் அலுவலகத்தில் புகுந்த புள்ளிமான் மீட்கப்பட்டு காட்டில் விடப்பட்டது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் காப்புக்காடு பகுதியில் இருந்து புள்ளி மான் ஒன்று வழி தவறி ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் உள்ள பொதுப் பணித்துறை அலுவலக கட்டிடத்தில் நுழைந்தது. பதற்றத்தில் அங்கும் இங்குமாக ஓடிய அந்த மான் கட்டிடத்தின் கண்ணாடியை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தது. உடனடியாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் மானை மீட்டு, காட்டுப் பகுதியில் விட்டனர்.
Related Tags :
Next Story