பம்ப் ஆப்பரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்


பம்ப் ஆப்பரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
x

பம்ப் ஆப்பரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராணிப்பேட்டை

தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பம்ப் இயக்குபவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஒருங்கிணைந்த மாநில நிர்வாகிகள் கூட்டம் வாலாஜாவில் நடைபெற்றது. கூட்டத்தில் உள்ளாட்சியில் பணியாற்றும் மேல் நிலை நீர்த் தேக்க தொட்டி பவர் பம்ப் இயக்குபவர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் ஒரே சீரான ஊதியம் வழங்கிட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story