கம்பங்கூழ்-நுங்கு விற்பனை மும்முரம்
உடன்குடி பகுதியில் கம்பங்கூழ்-நுங்கு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
தூத்துக்குடி
உடன்குடி:
உடன்குடி பகுதியில் தற்போத கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் உடன்குடி பஜார் பகுதியில் வீதி வீதியாக பதனீர், கம்பங்கூழ், பனை நுங்கு விற்பனை மும்முரமாக நடக்கிறது. தினசரி காலையில் பனைமரத்து பதனீர் ஒரு லிட்டர் ரூ.80-க்கும், கம்பங்கூழ் ஒரு டம்பளர் ரூ.20-க்கும், ஒரு நூங்கு ரூ.10-க்கும், இளநீர் ரூ.25-க்கும், செவ்விளநீர் ரூ.40-க்கும், விற்பனை செய்யப்படுகிறது. கோடைவெயிலை சமாளிக்க பொதுமக்கள் அதிகளவில் இவற்றை விரும்பி வாங்கிச் சாப்பிடுகின்றனர். இது தவிர கரும்பு சாறு, எலுமிச்சம்பழ ஜூஸ், பழ ஜூஸ் போன்றவற்றையும் மக்கள் அதிகளவில் விரும்பி கோடை வெயிலை சமாளித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story