தந்தை-மகனுக்கு ஆயுள் தண்டனை


தந்தை-மகனுக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 7 Dec 2022 12:15 AM IST (Updated: 7 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சொத்து தகராறில் பெண்ணை அடித்துக்கொன்ற தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனையும், மருமகளுக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கிருஷ்ணகிரி

சொத்து தகராறில் பெண்ணை அடித்துக்கொன்ற தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனையும், மருமகளுக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

பெண் அடித்துக்கொலை

கிருஷ்ணகிரி அருகே உள்ள துடுக்கனஹள்ளி முத்தூரான் கொட்டாயை சேர்ந்தவர் லட்சுமி (வயது 40). இவரது கணவர் திருப்பதி. இவர் கடந்த, 2016-ம் ஆண்டு இறந்து விட்டார். இவரது குடும்ப சொத்துக்களை திருப்பதியின் அண்ணன் கோவிந்தசாமி (55) பராமரித்து வந்தார். சொத்தை பிரிப்பதில் லட்சுமியுடன் அவருக்கு பிரச்சினை இருந்து வந்தது.

கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது கோவிந்தசாமி, இவரது மகன் சக்தி பராசக்தி (29), மருமகள் சித்ரா (26) ஆகியோர் லட்சுமியை உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கே.ஆர்.பி. அணை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து கோவிந்தசாமி கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி சுதா தனது தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட கோவிந்தசாமி, அவரது மகன் சக்தி பராசக்தி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,500 அபராதமும் விதித்தார்.

மேலும் சித்ராவுக்கு, கொலை செய்யப்பட்ட பெண்ணை ஆபாசமாக பேசி தாக்கிய குற்றத்திற்காக ஓராண்டு சிறையும், ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜரானார்.


Next Story