முன்னாள் ராணுவ வீரரை தாக்கியருக்கு சிறை


முன்னாள் ராணுவ வீரரை தாக்கியருக்கு சிறை
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-11T00:17:00+05:30)

முன்னாள் ராணுவ வீரரை தாக்கியருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிவகங்கை

தேவகோட்டை

தேவகோட்டை அருகே உள்ள மாவிடுதிகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 55). முன்னாள் ராணுவ வீரர். இவர் தனது நிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி பாரதி (45) என்பவர் ராமச்சந்திரனை தாக்கி படுகாயப்படுத்தினார். இதுகுறித்து ராமச்சந்திரன் தேவகோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதியின் மீது தேவகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எம். மாரிமுத்து, பாரதிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


Related Tags :
Next Story