புஞ்சைபுளியம்பட்டிரோட்டில் நின்ற லாரி தானாக ஓடி விபத்து;3 ஸ்கூட்டர்கள் சேதம்
புஞ்சைபுளியம்பட்டி ரோட்டில் நின்ற லாரி தானாக ஓடி விபத்துக்குள்ளானது. இதில் 3 ஸ்கூட்டர்கள் சேதமடைந்தனஃ
புஞ்சைபுளியம்பட்டி
கோவை மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த தனியார் கல்குவாரிக்கு சொந்தமான லாரி ஒன்று நேற்று மாலை ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டிக்கு வந்தது. லாரியை குமாரபாளையத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் ஓட்டி வந்தார். பின்னர் அவர் அந்த லாரியை புஞ்சைபுளியம்பட்டியில் சந்தியமங்கலம் ரோட்டில் உள்ள அரசு உடைமையாக்கப்பட்ட வங்கி அருகே உள்ள சைக்கிள் கடையில் முன்பு நிறுத்தினார்.
இதையடுத்து சைக்கிள் கடையில் இருந்து வெல்டிங் கியாஸ் சிலிண்டரை எடுத்து லாரியில் டிரைவர் ராமகிருஷ்ணன் ஏற்றினார். அப்போது லாரி திடீரென இயங்கி தானாக ஓடியது. இதில் அருகில் வங்கியின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த 3 ஸ்கூட்டர்கள் சேதம் அடைந்தது. நல்லவேளையாக வங்கி முன்பு ஆட்கள் யாரும் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.