கல்வி ஆண்டின் முதல் நாளில் புதிய சீருடை அணிந்து மாணவர்கள் உற்சாகம்
கோடை விடுமுறை நிறைவடைந்ததை தொர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கல்வி ஆண்டின் முதல் நாளில் புதிய சீருடை அணிந்து மாணவர்கள் பள்ளிக்கு உற்சாகமாக வந்தனர்.
கோடை விடுமுறை நிறைவடைந்ததை தொர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கல்வி ஆண்டின் முதல் நாளில் புதிய சீருடை அணிந்து மாணவர்கள் பள்ளிக்கு உற்சாகமாக வந்தனர்.
பள்ளிகள் திறப்பு
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கோடை வெப்பம் அதிகரித்த நிலையில், ஜூன் 7-ந் தேதிக்கு பள்ளி திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னரும் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. 1 முதல் 5-ம் வகுப்பு வரை நாளை (புதன்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
481 பள்ளிகள்
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 66 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 12 உதவி பெறும் உயர்நிலைப்பபள்ளிகள், 78 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 14 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், 76 தனியார் பள்ளிகள், 206 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள், 29 உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகள் என 481 பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கின.
2023-2024-ம் கல்வி ஆண்டின் முதல் நாளான நேற்று மாணவர்கள் புதிய சீருடை அணிந்து உற்சாமாக பள்ளிக்கு வந்தனர்.
இனிப்பு வழங்கி வரவேற்பு
திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ இனிப்பு வழங்கி வரவேற்றார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் விமலாபிரபாகரன், பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவரேகா மற்றும் பலர் உடன் இருந்தனர்.
இதே போல் புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவர்களை ஒன்றியக்குழு தலைவர் தேவா வரவேற்று, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்வர்களை பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். அரசு பள்ளிகளில் நேற்று முதல் நாளே மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
நீடாமங்கலம்
நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 25 நடுநிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள் வழங்கப்பட்டன. ரிஷியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு நீடாமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலர் சம்பத் விலையில்லா பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகளை வழங்கினார். தேவங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் (நிலை-2) முத்தமிழன் விலையில்லா பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகளை வழங்கினார்.