கருத்துக்களைக் கேட்டு கட்டப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பி.ஆர்.நடராஜன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.


கருத்துக்களைக் கேட்டு கட்டப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பி.ஆர்.நடராஜன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
x

கருத்துக்களைக் கேட்டு கட்டப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பி.ஆர்.நடராஜன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

திருப்பூர்

அனுப்பர்பாளையம்,

அவினாசி அருகே வஞ்சிபாளையம் திருப்பூர் செல்லும் சாலையில் கட்டப்பட்டு வரும் பாலம் மக்களின் கருத்துக்களைக் கேட்டு கட்டப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பி.ஆர்.நடராஜன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

பாலம் அமைக்கும் பணி

அவினாசி ஒன்றியம் கணியம்பூண்டி ஊராட்சி வஞ்சிபாளையம் பகுதியில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் புதிதாக பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலத்தின் அருகில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செல்வதற்கு போதிய வழித்தடம் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். அத்துடன் பாலமும் உயர்வான நிலை கட்டப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பாதிப்படைவார்கள். மேலும் அமைக்கப்படுகிற பாலத்தில் மழைநீர் ஆனது ரெயில்வே இடத்தில் தேங்கும் நிலை உருவாகிறது. இதன் காரணமாக ரெயில்வே தண்டவாளத்தில் மழைநீர் சூழும் அபாயம் ஏற்படும்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார். அத்துடன் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்திலும் இதனை வலியுறுத்தி பேசியுள்ளார். இருப்பினும் இப்பணி நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து புதுப்பாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பொதுமக்களுக்கு ஏதுவாக பாலம் அமைத்து தர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வலியுறுத்தியுள்ளனர்.

பி.ஆர்.நடராஜன் எம்.பி.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை் சேர்ந்த கோவை நாடாளுமன்ற தொகுதி பி.ஆர். நடராஜன் எம்.பி., பாலம் கட்டப்பட்ட இடத்தை பார்வையிட்டார். இதன் தொடர்ச்சியாக நெடுஞ்சாலை துறை அலுவலர்களை சந்தித்து பாலத்தை ஆய்வு நடத்த மாறு கூறியுள்ளார். இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு, உரிய அளவில் பாலம் கட்டப்படும் என கூறியுள்ளார் அதிகாரிகள். இருப்பினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன் பொதுமக்களின் கருத்து கேட்ட பிறகு பாலம் கட்ட வேண்டும் என கூறியுள்ளார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி, புதுப்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் குமரவேல், பாலசுப்பிரமணியம், தேவிகா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் முருகன், மோகனசுந்தரம், கிளைச் செயலாளர் ராமகிருஷ்ணன், கணியம்பூண்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நாச்சிமுத்து உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.



Next Story