புறநானூற்று நாடக நூல் வெளியீட்டு விழா


புறநானூற்று நாடக நூல் வெளியீட்டு விழா
x

கடையத்தில் புறநானூற்று நாடக நூல் வெளியீட்டு விழா நடந்தது.

தென்காசி

கடையம்:

கடையம் சத்திரம் பாரதி பெண்கள் உயர்நிலை பள்ளியில் வைத்து புலவர் வெய்கைமுத்து எழுதிய மக்களுக்காகவே மன்னர்கள் என்ற புறநானூற்று கவிதை நாடக நூல் வெளியிடப்பட்டது. விழாவில் முன்னாள் தலைமையாசிரியர் கல்யாண சிவகாமி நாதன் வரவேற்றார். சோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வெளியிட, முதல் பிரதியை முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கட்ராமன், சத்திரம் பாரதி கல்வி குழுமங்களின் செயலாளர் அனந்த ராமசேஷன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் நீதிபதி சிவாஜி செல்லையா மற்றும் கடையம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெயக்குமார், வடக்கு ஒன்றிய செயலாளரும், கடையம் யூனியன் துணை தலைவருமான மகேஷ் மாயவன், கடையம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அருள்வேல் ராஜன், பஞ்சாயத்து தலைவர்கள் டி.கே.பாண்டியன், பொன் ஷீலா பரமசிவன், முப்புடாதி பெரியசாமி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார், பஞ்சாயத்து துணைத்தலைவர் மகாலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, தளபதி மணி, அரவிந்த், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சத்திரம் பாரதி பள்ளி தலைமை ஆசிரியை ராமலட்சுமி நன்றி கூறினார்.


Next Story