ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 580 நெல் மூட்டைகள் கொள்முதல்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 580 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெற்பயிர்களை அறுவடை செய்து கலவையில் உள்ள ஒழுங்குமுறைவிற்பனை கூடத்திற்கு விற்பனைக்காக கொண்டு வந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு 580 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தது.
75 கிலோ மூட்டை கே.ஓ.51 ரகம் குறைந்தபட்ச விலை ரூ.1,152, அதிக விலை ரூ.1,152-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஏ.டி.டி. 37 குண்டு ரகம் குறைந்தபட்சம் ரூ.1,222 முதல் அதிக பட்சம் ரூ.1,303 வரையும், மகேந்திரா ரகம் குறைந்த பட்சம் ரூ.1,482 முதல் அதிகபட்சம் ரூ.1,599 வரை விற்பனையானது
இந்த தகவலை கலவை ஒழுங்குமுறை விற்பனை நிலைய கண்காணிப்பாளர் மதன் பாண்டியன் தெரிவித்தார்
Related Tags :
Next Story