ஏப்ரல் மாதம் முதல் கொப்பரை கொள்முதல்


ஏப்ரல் மாதம் முதல் கொப்பரை கொள்முதல்
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் வருகிற ஏப்ரல் மாதம் முதல் கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் வருகிற ஏப்ரல் மாதம் முதல் கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கொப்பரை கொள்முதல்

தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் அரவை கொப்பரை ஒரு கிலோ ரூ.108.60-க்கும், பந்து கொப்பரை ஒரு கிலோ ரூ.117.50-க்கும் விவசாயிகளிடம் இருந்து ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலமாக கொள்முதல் செய்ய அரசு அனுமதி வழங்கியது.

அதன்படி 2023-ம் ஆண்டிற்கு விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ஏப்ரல் 1-ந் தேதி முதல் 30.9.2023-ந் தேதி வரை கோவை மாவட்டத்தில் உள்ள 10 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக கொப்பரை கொள்முதல் மேற்கொள்ளப்பட உள்ளது. தேங்காய் கொப்பரைக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள தர அளவு மற்றும் தேவைப்படும் ஆவணங்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள அருகாமையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை தொடர்பு கொள்ளலாம்.

விவசாயிகள் பயன்பெறலாம்

இந்த வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்தி கொண்டு, தாங்கள் உற்பத்தி செய்யும் கொப்பரையினை விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலமாக விற்பனை செய்து பயன்பெறுமாறு கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்து உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story