தஞ்சை பெரியகோவிலில் தூய்மை பணி
தஞ்சை பெரியகோவிலில் தூய்மை பணி
தஞ்சாவூர்
இந்திய தொல்லியல் துறை சார்பில் தூய்மை பிரசாரம் கடந்த 2-ந்தேதி முதல் வருகிற 31-ந்தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தூய்மை பணி உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி வட்ட இந்திய தொல்லியல் துறையின் தஞ்சை கிளை சார்பில் தூய்மை பணி பெரிய கோவில் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. திருச்சி வட்ட தொல்லியல் துறை இயக்குனர் அருண்ராஜ் உத்தரவின் பேரில் தஞ்சை தொல்லியல் துறை முதுநிலை பராமரிப்பு உதவியாளர்கள் சங்கர், சீதாராமன் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது. இதில் தொல்லியல் துறை ஊழியர்கள், தூய்மை துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு பணிகளை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story