கொணவட்டம் பகுதியில் ரூ.37 லட்சத்தில் ஏற்படுத்தப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம்


கொணவட்டம் பகுதியில் ரூ.37 லட்சத்தில் ஏற்படுத்தப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம்
x
தினத்தந்தி 8 July 2023 5:04 PM IST (Updated: 9 July 2023 3:24 PM IST)
t-max-icont-min-icon

கொணவட்டம் பகுதியில் ரூ.37 லட்சத்தில் ஏற்படுத்தப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் செயல்பட தொடங்கியது.

வேலூர்

வேலூர் கொணவட்டம் ரோஜாமேடு பகுதியில் மாநகராட்சி உருது தொடங்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு புதிய பள்ளி கட்ட வேண்டும் என்றும், அந்த பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி வேலூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரத்துடன் கூடிய கட்டிடம் கட்டப்பட்டது.

மேலும் அதன் அருகில் இருந்த உருது பள்ளி கட்டிடம் அகற்றப்பட்டு ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார். கார்த்திகேயன் எம்.எல்.ஏ. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தையும், பள்ளி கட்டிடத்தையும் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் கவுன்சிலர் சாஜிதா மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story