தூய்மை மக்கள் இயக்க விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
கடையநல்லூரில் தூய்மை மக்கள் இயக்க விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அச்சன்புதூர்:
கடையநல்லூர் நகராட்சியில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, மெகா துப்புரவு பணி, தூய்மை மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி கடையநல்லூர் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சுகாதார அலுவலர் இளங்கோ அனைவரையும் வரவேற்றார். நகரசபை தலைவர் ஹபிபூர் ரஹ்மான் விழிப்புணர்வு உறுதிமொழியை வாசித்தார். பின்னர் மஞ்சள் பை உபயோகம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மஞ்சள் பைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா, நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள், நகரசபை கவுன்சிலர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள், காவல் துறை அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.