வெங்காடம்பட்டியில் தூய்மை நடைபயணம்
வெங்காடம்பட்டி ஊராட்சியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடைபயணம் நடைபெற்றது.
தென்காசி
கடையம்:
வெங்காடம்பட்டி ஊராட்சியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு முழு சுகாதாரத்தை நோக்கி மக்களின் பயணம், தூய்மை நடைபயணம் நடைபெற்றது. வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமை தாங்கினார். ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். லட்சுமியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமேஸ்வரி, ஊராட்சி செயலர் பாரத், ஆசிரியர்கள் மணிவண்ணன், சண்முகநாதன், விவேகானந்தன், அன்னபுஷ்பம், மாரியம்மாள் மற்றும் நாகவல்லி பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story