கழுகாசலமூர்த்தி கோவிலில் பவுர்ணமி கிரிவலம்


கழுகாசலமூர்த்தி கோவிலில் பவுர்ணமி கிரிவலம்
x

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் நேற்று பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடந்தது.

காலை 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணியளவில் ஏராளமான பக்தர்கள் மலையை சுற்றி, 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா' என்ற கோஷத்துடன் கிரிவலம் வந்தனர். தொடர்ந்து முருகப்பெருமானுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கழுகுமலையை சுற்றியுள்ள 20 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கிரிவலம் சுற்றிவந்து வழிபாடு நடத்தினர்.


Next Story