கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பவுர்ணமி கிரிவலம்


கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பவுர்ணமி கிரிவலம்
x
தினத்தந்தி 1 Sept 2023 12:15 AM IST (Updated: 1 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, காலை 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காலை 7 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6.30 மணியளவில் பக்தர்கள் 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா' என்று கோஷமிட்டவாறு மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். தொடர்ந்து முருகப்பெருமானுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story