சிவகளை பரும்பில் மின்னொளி கபடி போட்டி பரிசளிப்புவிழா


சிவகளை பரும்பில் மின்னொளி கபடி போட்டி பரிசளிப்புவிழா
x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 7:04 AM IST)
t-max-icont-min-icon

சிவகளை பரும்பில் மின்னொளி கபடி போட்டி பரிசளிப்புவிழா நடந்தது.

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் அருகே உள்ள சிவகளை பரும்பு ஊர் பொதுமக்கள் மற்றும் பறக்குபடை கபடி குழுவினர் சார்பில் மாவட்ட அளவிலான 40- ம் ஆண்டு மின்னொளி கபடி போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா ஊர் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடந்தது. முதலிடம் பெற்ற கீழசெய்தலை அணிக்கு ஊர்வசி அமிர்தராஜ் வழங்கிய ரூ.30 ஆயிரம் ரொக்க பரிசினை தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிச்சையா வழங்கினார். முதல் பரிசுக்கான வெற்றிக்கோப்பையை சன்னியாசி நினைவாக தெற்கு மாவட்ட தி.மு.க துணைச் செயலாளர் ஆறுமுகப்பெருமாள் வழங்கினார். இரண்டு, மூன்றாம் இடம் பிடித்த அணிகளுக்கு பரிசு கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் நவாஸ்பாய், பஞ்சாயத்து உறுப்பினர் சுடலைமணி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் பன்னீர்செல்வம், சுப்பிரமணியம் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story