வடுகந்தாங்கல் வாரச்சந்தை ஏலத்தில் தள்ளு முள்ளு


வடுகந்தாங்கல் வாரச்சந்தை ஏலத்தில் தள்ளு முள்ளு
x

கே.வி.குப்பத்தில் நடந்த வடுகந்தாங்கல் வாரச்சந்தை ஏலத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

வேலூர்

வாரச்சந்தை ஏலம்

கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 2023-24-ம் ஆண்டு கே.வி.குப்பம், வடுகந்தாங்கல், லத்தேரி ஆகிய ஊராட்சிகளின் வாரச் சந்தைகளுக்கான, ஏலம் விடும் நிகழ்ச்சி தனித்தனி நேரங்களில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் பெ.மனோகரன் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பா.வேலு ஏலம்விடும் நிகழ்ச்சியை நடத்தினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தராஜ், விஜயகுமார், ரமேஷ், கணக்காளர் ஜீவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் அசோக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஏலம் எடுக்க வந்த ஏல தாரர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கி அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கே.வி.குப்பம் சந்தை ரூ.2 லட்சத்து 88 ஆயிரத்து 500-க்கு ஏலம் போனது. வடுகந்தாங்கல் சந்தை ரூ.86 ஆயிரத்து 500 - க்கு ஏலம் போனது. லத்தேரி சந்தை ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்திற்கு ஏலம் போனது.

தள்ளுமுள்ளு

வடுகந்தாங்கல் வாரச்சந்தை ஏலம்விடும் நிகழ்ச்சியின்போது ஏலதாரர்களிடையே வாக்குவாதம், கூச்சல் குழப்பம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசாருடன் மேலும் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். போலீசார் சமாதானம் செய்து அமைதிப்படுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது


Next Story