பொங்கல் பண்டிகையையொட்டி மகளிருக்கு புத்தாடை
காஞ்சிவாய் ஊராட்சியில் பொங்கல் பண்டிகையையொட்டி மகளிருக்கு புத்தாடை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் வழங்கினார்
குத்தாலம்:
குத்தாலம் அருகே காஞ்சிவாய் ஊராட்சியில் பொங்கல் பண்டிகையையொட்டி மகளிருக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு குத்தாலம் அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் தத்தங்குடி இளங்கோவன் தலைமை தாங்கினார். காஞ்சிவாய் அ.தி.மு.க. மூத்த கிளை நிர்வாகி கரும்பாயிரம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஆனந்தி சுந்தரேசய்யா, ஊராட்சி செயலாளர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குத்தாலம் தெற்கு ஒன்றிய இளைஞர்-இளம் பெண்கள் பாசறை செயலாளர் பாக்யராஜ் கரும்பாயிரம் வரவேற்றார். இதில் மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.பவுன்ராஜ் கலந்துகொண்டு மகளிருக்கு புத்தாடை வழங்கி பேசினார். இதில் குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரவர்மன், தெற்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் செழியன், வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன், கோனேரிராஜபுரம் கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரபோஸ்வர்மா, குத்தாலம் தெற்கு ஒன்றிய துணை செயலாளர், ஊராட்சி மன்ற தலைவர் மங்கைராஜேந்திரன் காஞ்சிவாய் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கண்ணன், சுந்தரேசன், ஆனந்தன், மீனாட்சி சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சங்கர் கணேஷ் நன்றி கூறினார்.