புதர் மண்டிய கிணற்றை சீரமைக்க வேண்டும்


புதர் மண்டிய கிணற்றை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு குடிநீர் வழங்கும், புதர் மண்டிய கிணற்றை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு குடிநீர் வழங்கும், புதர் மண்டிய கிணற்றை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அரசு ஆஸ்பத்திரி

பந்தலூரில் தாலுகா அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு தினமும் பந்தலூர், இண்கோநகர் காலனி, ரிச்மென்ட், மேங்கோரேஞ்ச், உப்பட்டி, பொன்னானி, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, பிதிர்காடு நெலாக்கோட்டை, கரியசோலை, எருமாடு, சேரம்பாடி, சேரங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். மேலும் நோயாளிகள் தங்கி இருந்து பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள், ஊழியர்கள், பணியாளர்களுக்காக பந்தலூர் பஜாரில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் கிணறு அமைக்கப்பட்டது. அங்கு பம்ப் மோட்டார் அறையும் கட்டப்பட்டது. இந்த கிணற்றில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே கிணற்றை சுற்றிலும் முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது.

சீரமைக்க வேண்டும்

இதனால் புதர்களில் இருந்து காய்ந்த இலைகள், செடிகள் தண்ணீரில் விழுந்து வந்தன. இதன் காரணமாக குடிநீர் சுகாதாரமற்ற முறையில் காணப்படுகிறது. மேலும் அந்த தண்ணீரை குடிப்பவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள குடிநீர் கிணறு சுகாதாரமற்று காட்சி அளிக்கிறது. கிணற்றை சுற்றிலும் புதர் மண்டி காணப்படுகிறது.

இதனால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், கிணற்று தண்ணீரை குடிப்பதால் மேலும் தொற்று ஏற்படும் நிலை உள்ளது. எனவே, கிணற்றை சுற்றிலும் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றுவதோடு, பம்ப் அறை மற்றும் கிணற்றை சுத்தப்படுத்தி சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story