புத்தூர் கால்நடை மருந்தகம் திறப்பு விழா காணுமா?

புத்தூர் கால்நடை மருந்தகம் திறப்பு விழா காணுமா?
x
தினத்தந்தி 28 July 2023 1:00 AM IST (Updated: 28 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

அய்யம்பேட்டை அருகே புத்தூர் கிராமத்தில் ரூ.40 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டு 5 மாதங்கள் ஆகியும் பூட்டிக் கிடக்கும் கால்நடை மருந்தகம் திறப்பு விழா காணுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை அருகே புத்தூர் கிராமத்தில் ரூ.40 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டு 5 மாதங்கள் ஆகியும் பூட்டிக் கிடக்கும் கால்நடை மருந்தகம் திறப்பு விழா காணுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கால்நடை மருந்தகம்

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கணபதி அக்ரகாரம், மணலூர், பெருமாள் கோவில், உள்ளிக்கடை, இலுப்பக்கோரை, பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், நாயக்கர் பேட்டை, குடிக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட பல்வேறு கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

இதன் மூலம் தங்கள் குடும்பத்திற்கு தேவையான சிறு வருவாயும் ஈட்டி வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் தங்கள் கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, ஊசி போடுதல், நோய் தொற்று போன்ற பல்வேறு சிகிச்சைகளுக்காக கணபதி அக்ரகாரம் கிராமத்தில் உள்ள கால்நடை மருந்தகத்தில் சிகிச்சையும், ஆலோசனைகளையும் பெற்று வருகின்றனர்.

ரூ.40 லட்சம் செலவில்...

இந்த நிலையில் இந்த மருந்தக கட்டிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்த காரணத்தினால் இடிந்து விழுந்தது. இதனால் அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் தற்காலிகமாக இந்த மருந்தகம் இயங்கி வருகிறது. இந்த மருந்தகத்திற்கு பதிலாக கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி புத்தூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் புதிய கால்நடை மருந்தகம் ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்டது.

இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 5 மாதங்கள் ஆகியும் இதுவரை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. எனவே இந்த கால்நடை மருந்தகத்தை உடனே திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அய்யம்பேட்டை அருகே புத்தூர் கிராமத்தில் ரூ.40 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டு 5 மாதங்கள் ஆகியும் பூட்டிக் கிடக்கும் கால்நடை மருந்தகம் திறப்பு விழா காணுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், 'எங்கள் கால்நடைகளை பரிசோதனை மற்றும் நோய் தடுப்புக்காக கணபதி அக்ரகாரம் கிராமத்தில் உள்ள கால்நடை மருந்தகத்தில் காண்பித்து சிகிச்சையும், ஆலோசனையும் பெற்று வந்தோம். இங்கிருந்த கால்நடை மருந்தக கட்டிடம் பழுதடைந்த காரணத்தினால் சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதனால் அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் தற்காலிகமாக இந்த மருந்தகம் இயங்கி வருகிறது.

சிறிய அளவில் இயங்கும் இந்த மருந்தகத்திற்கு வெளியே எங்கள் கால்நடைகளை கட்டி போட்டுவிட்டு, நாங்களும் வெயிலில் காத்துக் கிடக்க வேண்டிய பரிதாப நிலையில் உள்ளோம். எனவே தற்போது புத்தூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகத்தை உடனே திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்' என்றனர்.

Next Story