கோலியனூர்புத்துவாயம்மன் கோவில் தேரோட்டம்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்


கோலியனூர்புத்துவாயம்மன் கோவில் தேரோட்டம்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்
x
தினத்தந்தி 6 May 2023 12:15 AM IST (Updated: 6 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோலியனூர் புத்துவாயம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

விழுப்புரம்


விழுப்புரம் அருகே கோலியனூரில் மிகவும் பிரசித்தி பெற்றதும் பழமைவாய்ந்ததுமான புத்துவாயம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதுபோல் இந்த ஆண்டுக்கான சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று திருக்கல்யாணம், பூச்சொரிதல் நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் அன்ன வாகனம், கற்பக விருட்சகம், பூத வாகனம், நாக வாகனம், தெருவடைச்சான், யானை வாகனம், சிம்ம வாகனம், பூங்கரகம், குதிரை வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை 8 மணியளவில் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் புத்துவாயம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். இந்த தேரை, புகழேந்தி எம்.எல்.ஏ. வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். பின்னர் இந்த தேரை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்துச்சென்றனர். இத்தேர், கோலியனூர் கிராம முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி, அசைந்தவாறு சென்றது. இந்த தேருக்கு முன்னால் விநாயகர் தேரும், முருகர் தேரும் சென்றது. 3 தேர்களும், கோலியனூரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை சென்றடைந்தது. அதன் பிறகு அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோலியனூர் ஒன்றியக்குழு தலைவர் சச்சிதானந்தம், ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி உள்ளிட்ட கோலியனூர் மற்றும் சுற்றுவட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார், உதவி ஆணையர் சந்திரன், ஆய்வாளர் லட்சுமி, செயல் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் கோலியனூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story