புதூர் பகுதியில் 64 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்- போலீஸ் கமிஷனர் திறந்து வைத்தார்


புதூர் பகுதியில் 64 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்- போலீஸ் கமிஷனர் திறந்து வைத்தார்
x

புதூர் பகுதியில் 64 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை போலீஸ் கமிஷனர் திறந்து வைத்தார்

மதுரை


மதுரை மாநகர காவல்துறை சார்பில் பொது இடங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சமூக விரோதச்செயல்களில் ஈடுபடுவோர் கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், கோ.புதூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மூன்றுமாவடி, கோ.புதூர் பஸ் நிலையம், பூ மார்க்கெட் உள்பட 64 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்கவுள்ள நிலையில் கள்ளழகர் வரும் வழியான மூன்றுமாவடி பகுதியை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. புதிதாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களுக்கான திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் கலந்து கொண்டு, புதிதாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்தார். இதில் வடக்கு துணை கமிஷனர் அரவிந்தன், அண்ணா நகர் உதவி கமிஷனர் சூரக்குமார், கோ.புதூர் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story